சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2020 09:10
சபரிமலை: சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது.
அதன்படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் நிலக்கல்லில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பக்தர்கள் தாங்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நிபுணர் குழு மேலும் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், ‛ நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.