Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனருளால் சிறப்பான வாழ்வு அமைய... சித்தர்களின் புண்ணியபூமி திருவண்ணாமலை சித்தர்களின் புண்ணியபூமி ...
முதல் பக்கம் » துளிகள்
சுந்தர காண்டம் படிக்கும் முறை
எழுத்தின் அளவு:
சுந்தர காண்டம் படிக்கும் முறை

பதிவு செய்த நாள்

14 அக்
2020
03:10

கவிச்சக்கரவர்த்தி கம்பர்  ராமாயண காவியத்தை 10500 பாடல்களில் படைத்தார். பால, அயோத்தியா, ஆரண்ய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் இதில் உள்ளன. அவற்றில் சுந்தர காண்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. கோயில் சிறப்பு மிக்கது என்றாலும், கருவறைக்கு எப்படி தனிச்சிறப்பு உண்டோ அப்படியே ராமாயணம் என்னும் கோயிலுக்கு கருவறையாக இருப்பது சுந்தர காண்டம். சிறையிருந்த செல்வியான சீதையும் இதற்கு ஒரு காரணம். தாயின் வயிற்றில் பத்து மாதம் வளர்ந்த பின் உலகிற்கு வரும் குழந்தை போல ராவணனால் சிறைப்படுத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் 10 மாதம் தவமிருந்து ராமனை அடைந்த வரலாறைச் சொல்வது சுந்தர காண்டம்.   

 14 படலங்கள் இதில் உள்ளன.     
1.    கடல் தாவு படலம்
2.    ஊர் தேடு படலம்
3.    காட்சிப் படலம்
4.    உருக் காட்டு படலம்
5.    சூடாமணிப் படலம்
6.    பொழில் இறுத்த படலம்
7.    கிங்கரர் வதைப் படலம்
8.    சம்புமாலி வதைப் படலம்
9.    பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
10.    அக்ககுமாரன் வதைப் படலம்
11.    பாசப் படலம்
12.    பிணி வீட்டு படலம்
13.    இலங்கை எரியூட்டு படலம்
14.    திருவடி தொழுத படலம்

ஒன்று முதல் 14 வரை படித்தால் அளப்பரிய நன்மை ஏற்படும். கருவுற்ற பெண் சுந்தர காண்டத்தை தினமும் படிக்க  அனுமனைப் போல வீரமும், ஆற்றலும் மதிநுட்பமும் மிக்க குழந்தை பிறக்கும். நோயுற்றவர்கள் படித்தால் குணமாவதோடு உடல்பலம், மனவலிமை கிடைக்கும். திருமணத்தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் படித்தால் தடை நீங்கி திருமணம் கை கூடும். குழந்தைப்பேறு கிடைக்கும்.  
தொடர்ந்து வரும் துன்பங்கள் விலகி இன்பமான வாழ்வு அமையும். சிறைப்பட்டது போல அடைபட்ட மனநிலையில் இருப்பவர்கள் அதில் இருந்து வெளிப்பட்டு மகிழ்ச்சி காண்பர். வாழ்வில் எந்த தேவைக்காகவும், எந்த விருப்பம் நிறைவேற  வேண்டும் என்றும் சுந்தர காண்டம் படிக்கலாம்.  உதாரணமாக வேலை, வீடு போன்ற தனிப்பட்ட பிரார்த்தனை நிறைவேறும்.  
 இதற்காக தமிழ் அல்லது சமஸ்கிருத ராமாயணப் புத்தகத்தை படிக்கலாம். ஒரு நல்ல நாளில் ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து அதற்கு துளசி மாலை சாத்தி விளக்கேற்றி பால், பாயாசம், வடை, பானகம் படைத்து வழிபட வேண்டும். ராமாயண புத்தகத்திற்கும் பூக்கள், சந்தனம், குங்குமிட வேண்டும். அருகில் மற்றொரு ஆசனம் அமைத்து அதற்கும் சந்தனம், குங்குமம் இட்டு வழிபட வேண்டும். சுந்தர காண்டத்தின் நாயகனான அனுமனுக்காக இந்த ஆசனம். ஏனெனில் ராமாயணம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் நேரில் எழுந்தருள்வதாக ஐ தீகம்.  அதன் பின் படலங்களைப் படித்து தீபாராதனை செய்து வேண்டுதலை ஸ்ரீராமர் திருவடியில் வைக்க எண்ணியது ஈடேறும்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar