Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதூர் பிரத்தியங்கிரா கோவிலில் ... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:10

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 6.30 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. கோவில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 8 மணிக்கு மகா தீபாராதனையுடன் உற்சவம் நிறைவடைந்தது. இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில் குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 8 வது மாதமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி உற்சவம் நடந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்திருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்தனர். இவர்களை போலீசார் வளத்தி மற்றும் மேல்மலையனூர் எல்லைகளில் தடுத்து நிறுத்தினர். என்ற போதும் ஆயிரக்கணக்கானவர்கள் நடந்து மேல்மலையனூர் வந்தனர். அவர்களையும் கோவில் அருகே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar