Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி அமாவாசை: ராமேஸ்வரத்தில் ... நவராத்திரி இரண்டாம் நாள்: இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! நவராத்திரி இரண்டாம் நாள்: இழந்ததைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 அக்
2020
08:10

 திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்றுஇரவு பெரிய சேஷ வாகனத்தில் கோவிந்தராஜர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார்.

திருமலையில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும்.இது மூன்றாவது வருடம் என்பதால் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. திருமலையில் நடைபெறும் விழாக்களிலேயே மிகவும் விசேஷமானது பிரம்மோற்சவ விழாதான் பல லட்சம் மக்கள் கூடுவர் பல்வேறு மாநில கலைநிகழ்வுகள் நடைபெறும். கொரோனா தொற்று பயம் காரணமாக பக்தர்களை தவிர்க்கும் பொருட்டு கோவிலுக்குள்ளேயே விழாக்கள் நடைபெற்றது. கோவிலின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நவராத்திரி பிரம்மோற்சவம் மாடவீதிகளில் நடத்தலாம் என்றும் குறைந்த அளவு பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தனர். ஆனால் கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக கடந்த வாரம் பொறுப்பேற்ற ஜவஹர் ரெட்டி இன்னும் கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் கடந்த மாதம் நடைபெற்றது போலவே இந்த மாதமும் கோவிலுக்குள்ளேயே விழாவினை நடத்த உத்திரவிட்டார். அதன்படி நவராத்திரி பிரம்மோற்சவ முதல்நாளான இன்று இரவ 8 மணியளவில் உற்சவரான மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். விழாவினை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது கோவிலுக்கு உள்ளே விழா நடக்கும் இடம் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமான எஸ்விபிசி சானலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar