Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி கோயிலுக்கு கொடிமர ... விஸ்வநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்! விஸ்வநாத சுவாமி கோயில் புதிய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி அருகே சாய் கைலாஷ் திறப்பு விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மே
2012
11:05

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளியில் அமைந்துள்ள சாய் கைலாஷின் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளி பகுதியில் நீலகிரி மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில் சாய் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் திறப்பு விழா நேற்று நடந்தது. ஸ்ரீ சத்ய சாய் சேவை அமைப்பின் அகில இந்திய தலைவர் சீனிவாசன், கோவிலை கட்ட முயற்சி மேற்கொண்ட கோவிந்தராஜூலு ஆகியோர் குத்துவிளக்கேற்றி கோவிலை திறந்து வைத்தனர். பின்பு நடந்த விழாவில் மாவட்ட தலைவர் ராமு வரவேற்றார்.

108 பஜனை மண்டலங்கள்: மாநில தலைவர் வரதன் பேசுகையில்,பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஊட்டியில் சாய் ஸ்ருதியை நிறுவினார். பின்னர் 1985ம் ஆண்டில் ஊட்டியிலிருந்து கொடைகானலுக்கு சென்று விட்டார். பின்னர் ஊட்டிக்கு பாபா வரவில்லை. இந்நிலையில், தற்போது சாய் பாபாவுக்கு ஊட்டியில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 17ம் தேதியே பாபா குடியேறி விட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் பிறருக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். நீலகிரியில் 108 பஜனை மண்டலங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பஜனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன் மாதிரியாக கொண்டு பல சேவை மையங்கள் உருவாகும், என்றார்.

பக்தியில் முதிர்ச்சி: மாநில இளைஞர் ஒருங்கிணைப்பாளர் விஜயகிருஷ்ணன் பேசியதாவது; சுவாமியின் விரும்தோம்பலில் நாம் இன்று உள்ளோம். ஊட்டி என்றாலே பாபா குதூகுலமாகி விடுவார். ஊட்டியில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு. பிப்ரவரி மாதம் ஊட்டியின் பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவது வழக்கம். இதனால் பக்தர்களுக்காக பெருமான் காத்திருப்பார். பக்தர்கள் பாபாவிடம் முழுவதுமாக சரணாகதியாகி விடுவர். தங்கள் தோட்டத்தில் பகவானுக்காக தனி இடம் ஒதுக்கி, அதில் விளையும் காய்கறிகளை ஆண்டுதோறும் பாபாவுக்கு படைப்பர். இவர்களின் பக்தியில் முதிர்ச்சி இருக்கிறது. பாபா நீலகிரியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வந்துள்ளார். அவர் வந்தற்கான அடையாளங்கள் இன்றும் உள்ளன. தனது முதல் பள்ளியை ஊட்டியில் தான் பகவான் அமைத்தார். 18 அவதாரங்களை கொண்ட லாக்கெட்டை வடிவமைக்கும் போது பாபா ஊட்டியில் இருந்தார்.  ஊட்டியில் உள்ள இந்த கோவில் மகா ஷேத்திரமாக மாற போகிறது. இதற்கான பாபாவின் அனுகிரகம் இந்த கோவிலுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு விஜயகிருஷ்ணன் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar