Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறிவுக்கு ஆற்றல் தரும் : நவராத்திரி ... பழநியில் ஐப்பசி மாத பிறப்பு வழிபாடு பழநியில் ஐப்பசி மாத பிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரபட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குலசேகரபட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 அக்
2020
03:10

 துாத்துக்குடி:குலசேகரபட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில், 12 நாட்கள் நடக்கும் தசரா திருவிழாவில், பக்தர்கள் விரதமிருந்து, காளி, பெண், அனுமன், குறத்தி, குறவன், அம்மன் போன்ற பல்வேறு வேடமிட்டு ஊர் ஊராக சென்று, தர்மம் எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவர்.

இவ்விழாவில், கடற்கரையில் நடக்கும் சூர சம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி உள்ளது. காப்பு கட்டியவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். தங்கள் சொந்த ஊரிலேயே காப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா விழா நேற்று காலை, 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. விழாவின், 12 நாட்களிலும் இரவில் முத்தாரம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை வலம் வருவார். முதல் நாளான நேற்று இரவு, சிம்ம வாகனத்தில் துர்கை கோலத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்காரம், அக்., 26ல் பக்தர்களின்றி கோவில் வளாகத்தினுள் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar