Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் ஜெயந்திநாதருக்கு ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி மஹோற்சவம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

19 அக்
2020
12:10

 திருவொற்றியூர் : வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி திருவிழா கொடியேற்றம், பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ஆண்டுதோறும், நவராத்திரி திருவிழா, இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்களின்றி எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.

விநாயகர், சண்டிகேஸ்வரர், உற்சவ தாயார் தபசு அலங்காரத்தில், கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின், கொடிமரம், மஞ்சள் நீர், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட புனித பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டன. கொடிமரம் அலங்கரிக்கப்பட்ட பின், மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. பின், உற்சவ தாயார், கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து, நிலையை அடைந்தார். நவராத்திரி நாட்களில், உற்சவ தாயார், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமாமகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, சரஸ்வதி, மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வருவார்.வரும், 26ம் தேதி, கொடியிறக்கத்துடன், நவராத்திரி திருவிழா நிறைவுறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்நிகழ்ச்சிகளில், பக்தர்கள் பங்கேற்ற அனுமதி கிடையாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar