Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கயிலாசநாதர் கோவிலில் நவராத்திரி ... திருப்பதிக்கு செல்லும் பூக்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாயல்குடியில் 13ம் நுாற்றாண்டு கல்வெட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2020
05:10

 ராமநாதபுரம்: சாயல்குடியில் அழகிய தமிழ் பெயர்கள் கொண்ட கி.பி.,13ம் நுாற்றாண்டை சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு, அரசு மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைபாதுகாப்பு மன்றம் விசாலி, கோகிலா, மனோஜ் ஆகியோர், சாயல்குடி ஜமீன்தார் அரண்மனை எதிரில் 6 அடி நீளமுள்ள இரண்டு, 3 அடி உயரமுள்ளது ஒன்று என மூன்று கல்வெட்டுகள் கண்டெடுத்தனர். இவற்றை ஆய்வு செய்தபோது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத்தெரியவந்தது.

தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:மூன்று கற்களிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 55 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டாக உள்ளது. நிச்சி நாயகனான மேல்கீரை நாடாள்வான், மாணிக்கன் உய்யவந்தானான குளதையாதயன் ஆகிய இருவரும்தங்களுக்குச் சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனார் கோயிலுக்கு விற்று, அதை சிவன் கோயில்களின் பொறுப்பாளராகக் கருதப்படும் சண்டேஸ்வரதேவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளதையும், இதற்கு சாட்சியாக பலர் கையொப்பம் இட்டுள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.தற்போது நிலம் வாங்குபவர், விற்பவர், சாட்சிகள்ஆகியோர் பத்திரத்தில் கையொப்பம் இடுவதுபோல அக்காலத்தில் ஓலைச் சுவடியில் கையொப்பம் பெற்று அதை கல்வெட்டில் வெட்டி வைப்பார்கள். கையொப்பம் இடத் தெரியாதவர்களை தற்குறி எனவும், அவர்களுக்கு மற்றவர்கள் சான்று இடுதலை தற்குறி மாட்டெறிதல் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.அழகிய தமிழ் பெயர்கள்மேலும் கூத்தன் சோழனான செம்பிலராயன்,கொற்றன் முத்தனான செம்பில் வளநாடன், சொல் நாணலையான் வழுதி சிங்கராயன், சிறுமுத்தனாளுடையனான வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான் தொண்டையன், பேரருங்கோவேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்ட ராயன் ஆகிய பெயர் உள்ளது. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறியமுடிகிறது. கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்துவிட்டது, எல்லைகளாக இரு பெருவழிகள், போளம், சிறுகுளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. பெரியபட்டணம், கன்னியாகுமரி செல்லும் ரோடு பெருவழிகளாக இருக்கலாம். போளம் என்பது பிசின் போன்ற நறுமணப் பொருளாகும். வணிகர்களின் போளம் விற்ற இடமும் ஒரு எல்லையாக கூறப்பட்டுஉள்ளது. சாயல்குடி ஒரு முக்கிய வணிக நகரமாக பழங்காலம் முதல் இருந்திருப்பதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது,.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
அரியலுார்; கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 2,625 கிலோ அரிசியில் சாதம் சமைத்து, அன்னாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சேலம்; பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar