Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜர் கோவில் தேருக்கு புதிய ... எல்லோரும் கொண்டாடுவோம்: இன்று மிலாடி நபி எல்லோரும் கொண்டாடுவோம்: இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் வார நாட்களில்-1000; சனி, ஞாயிறு-2000 பேரும் தரிசனத்திற்கு அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் வார நாட்களில்-1000; சனி, ஞாயிறு-2000 பேரும் தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

30 அக்
2020
10:10

சபரிமலை: மண்டல, மகர விளக்கு சீசனில் வார நாட்களில் ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பேரும் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 24 மணி நேரத்துக்குள் எடுத்த கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது: மண்டல சீசனுக்கு நவ.,15 மாலை நடை திறக்கப்படுகிறது. நவ.,16 முதல் தரிசனத்திற்கு அனுமதி வழக்கப்படும். டிச.,26 மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்பட்டு டிச.,30 மாலை நடை திறக்கும். ஜன.,20 வரை நடை திறந்திருக்கும். மகரவிளக்கு ஜன.14 நடைபெறும். தரிசனத்திற்கு இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இவர்கள் 24 மணி நேரத்துக்குள் எடுத்த கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும். வார நாட்களில் ஆயிரம், சனி, ஞாயிறு இரண்டாயிரம், மண்டலபூஜை, மகரவிளக்கு நாட்களில் ஐந்தாயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை பாதைகளின் பல்வேறு இடங்களில் கோவிட்-19 பரிசோதனை மையம் அமைக்கப்படும். பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதி கிடையாது. சுவாமி ஐயப்பன் ரோடு வழியாக மட்டுமே பக்தர்கள் ஏறவும், இறங்கவும் அனுமதிக்கப்படுவார்கள். பம்பை, சன்னதானத்தில் பக்தர்கள் தங்க முடியாது. பக்தர்கள் கொண்டு வரும் நெய் கவுண்டர்களில் பெறப்பட்டு ஊழியர்கள் அபிஷேகத்துக்கு கொண்டு செல்லப்படும். நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் வரும் வாகனங்கள் பம்பை சென்று இறக்கிவிட்டு நிலக்கல் வந்து பார்க்கிங் செய்ய வேண்டும். மலைபாதையில் அவசர சிகிச்சை மையங்கள் இயங்கும். பணி நிமித்தமாக வருபவர்களும் கண்டிப்பாக கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழுடன் தான் வரவேண்டும். பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar