Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவித்ரோற்சவ விழா வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வழித்தடத்தில் நிம்மதியில்லை: பக்தர்கள் கடும் மன உளைச்சல்
எழுத்தின் அளவு:
கோவில் வழித்தடத்தில் நிம்மதியில்லை:  பக்தர்கள் கடும் மன உளைச்சல்

பதிவு செய்த நாள்

31 அக்
2020
06:10

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்திலும், வழித்தடத்திலும் நிலவும் பிரச்னைகளால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்தில், காலணிகள் விடும் பகுதி, நுழைவு வாயில், கோவிலின் பின்பக்கம் புதர் முளைத்துள்ளன. புதரில், பாம்பு அதிகளவில் உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.


புதர்களை அகற்றி கோவிலை சுத்தம் செய்யாமல், கோவில் நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.அதேபோல், கோவிலுக்கு செல்லும், இரண்டு வழித்தடத்திலும், கான்கிரிட் ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக படு மோசமான நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால், பல இடங்களில் குப்பை குவிந்துள்ளது.அதுமட்டுமின்றி, வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், கோவில் செல்லும் வழித்தடத்தில், வணிகக்கடைகளின் ஆக்கிரமிப்புகளால், ரோடு குறுகலாக உள்ளது. இதனால், பக்தர்கள் பயணத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.இந்த வழித்தடத்தில், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கையை பிடித்து இழுத்து, எங்கள் கடையில வண்டி நிறுத்துங்க, மாலை, பூஜை பொருள் வாங்கிட்டு போங்க, என, கடைக்காரர்கள் கூறி தொல்லை கொடுக்கின்றனர்.கோவில் நிர்வாகம், ஆனைமலை பேரூராட்சியினர், வருவாய்த்துறையினர், பக்தர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அரசு துறை அதிகாரிகள், இப்பிரச்னைகளை சரிசெய்து, பக்தர்கள் நிம்மதியாக கோவிலுக்கு வந்து செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar