Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு வழிபட்ட கடற்கரையோர முருகன் ... குருபெயர்ச்சி எப்போது? குருபெயர்ச்சி எப்போது?
முதல் பக்கம் » துளிகள்
குருபகவான் பற்றிய குறிப்புகள்
எழுத்தின் அளவு:
குருபகவான் பற்றிய குறிப்புகள்

பதிவு செய்த நாள்

04 நவ
2020
02:11

* ஆங்கிரச முனிவருக்கும், ஸ்ரத்தா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் ‘பிரகஸ்பதி’ .  தவத்தில் ஈடுபட்டு சிவனருளால் நவகிரகங்களில் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாதராகவும் விளங்கும் பேறு பெற்றார்.  
* கிரகங்களில் ஆண்கிரகமான இவருக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.  
* குருதிசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5,7,9 பார்வைகளால் நன்மையை வழங்குவார்.
* மனைவி தாரா. வேதங்களையும் உணர்ந்தவர் குரு என்பதால் பிரம்மாவுக்கு மிக பிடித்தமானவர்.  
* குரு – தாரா தம்பதியருக்கு சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விஸ்வபுக், வடபாக்னி, ஸ்விஸ்டக்ருதி என்ற மகன்களும், ஸ்வாகா என்ற மகளும் உண்டு.
* வடக்கு ஈசான்ய திசைக்கு அதிபதி. புஷ்பராக மாலையை அணிந்தவர். தண்டம், கமண்டலம், அட்சமாலை, வரத ஹஸ்தம் கொண்ட கோலம் உடையவர்.
* எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரியனுக்கு வடக்கில் அமர்பவர். இவருக்குரிய எண் 3
* பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹத் ஜோதிஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ் என்னும் ஐவரும் இவரது உடன்பிறந்தவர்கள்.  
* அதிதேவதை பிரம்மா. பிரத்யதி தேவதை இந்திரன். இவர்களை வணங்கினால் குருவருள் கிடைக்கும்.  
*  நீதிகாரகர், திரிலோகேசர், லோக பூஜ்யர், கிரகாதீசர், கருணைக்கடல், துாயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கம் அற்றவர் என இவர் போற்றப்படுகிறார்.
* குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் தருபவர் குருபகவான்.
* தென்குடித்திட்டை, ஆலங்குடி, திருவலிதாயம் (பாடி), திருச்செந்துார், குருவித்துறை, ஆழ்வார்திருநகரி, திருத்தணி இவருக்குரிய பரிகார தலங்கள்.
* தானியம் – கொண்டைக் கடலை, கிழமை – வியாழன், நிறம் – மஞ்சள், ரத்தினம் – புஷ்ப ராகம், உலோகம் – பொன், ஆடை – மஞ்சள் ஆடை.
* ‘சனியைச் சாய்வாய் கும்பிடு!’ ‘குருவை நேராய் நின்று கும்பிடு’ என்பார்கள். அதிகாலையில் குருமுகத்தில் விழித்தால், நினைத்த காரியம் யாவும் வெற்றி பெறும்.
* எல்லா தெய்வங்களுக்கும் மற்றவரைக் கொண்டு வழிபாடு செய்யலாம். குருபகவானை மட்டும் அவரவரே வழிபட்டால்தான் நன்மை கிடைக்கும்.  
* நாட்டை திறமையானவர்களை கொண்டு ஆள வைப்பதும், நவீன அறிவியல் வித்தைகளை கொடுப்பதும் இவரே. எனவே இவரை வணங்கினால் நாட்டுக்கு நன்மை.  
* திருமண பந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவர் குருபகவான். இவரின் அருள் இருந்தால் எளிதில் திருமண யோகம் அமையும்.  
* குருவின் அருள் இருந்தால் முட்டாளும் அறிவாளியாகலாம். மாணவர்கள் இவரை வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர்.
* சாந்த மூர்த்தியாக விளங்கும் குருபகவான், சதுர பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி அமர்பவர். சுக்கிரனுக்கு எதிரானவர். குளுமையான பொருளை விரும்புபவர்.
* தயிர்ச்சாதம், கற்கண்டு சாதம், கொண்டைக்கடலை, மஞ்சள் வாழை, பால், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு வைத்து வியாழக்கிழமை அன்று மஞ்சள் வண்ண மலரால் அலங்கரித்து குருபகவானுக்கு தீபம் ஏற்றினால் குருவருள் கிடைக்கும்.  பகலில் வழிபடுவது  சிறப்பு.  
* பூரண சுபகிரகம் என்னும் பெருமை கொண்டவர் குருபகவான் ஒருவரே.  
* அமைச்சன், தேவகுரு, சிகிண்டிசன், ஜீவன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், சுரகுரு, தாராபதி, தெய்வ மந்திரி, நற்கோள், சுபகிரஹன், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என 18 பெயர்கள் இவருக்குண்டு.  
* தனுசு, மீனம் சொந்த வீடுகள். ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவரே.  
* திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரை வழிபட்டு கிரகங்களில் சுபகிரகமாகும் பேறு பெற்றார் குரு. அதனால் ராஜகிரகம் என சிறப்பிக்கப்படுகிறார்.
* பொருட்செல்வம், குழந்தைச் செல்வம், இரண்டுக்கும் அதிபதி இவரே.  
* தனம், புத்திரகாரகர் என்பதால் குருதசை நடக்கும் காலத்தில் பிள்ளைகள் மேன்மையான நிலையில் விளங்குவர்.  
* குருபகவானின் பார்வை ஜாதகத்தில் பலமாக இருந்தால் ஞானம், தெளிந்த அறிவு, ராஜ யோகம், நிதி, நீதி,  பணப்புழக்கம், நல்ல உறவுகள் அமையும்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar