Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை ... தி.மலை கோவிலுக்கு 2 உதவி ஆணையர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகை ஒரு குடும்பமாக நினைத்து தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்:சத்குரு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2020
05:11

நாம் அனைவரும், உலகத்தையே ஒரு குடும்பமாக பாவித்து, அன்பாகவும், ஆனந்தமாகவும் தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள், என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார். அவரது தீபாவளி வாழ்த்து செய்தி:இந்த தீபாவளி சற்று வித்தியாசமானது. கொரோனாவை ஏதிர்கொண்டு வரும் சூழலில், தீபாவளியை சமூகத்துடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற தேவை இல்லை. நமக்குள் அன்பாக, ஆனந்தமாக இருந்தாலே, அதுவே ஒரு கொண்டாட்டம் தான்.

எனவே, இந்த கொண்டாட்டத்தை நீங்கள் விடக்கூடாது. தீபாவளி நாளில் நம் வாழ்க்கையில் ஒரு புது வெளிச்சம் வரவேண்டும்.இந்நன்னாளில், உங்கள் நன்மைக்காக ஒரு விளக்கு ஏற்றுங்கள்; குடும்பம், நண்பர்களுக்காக மற்றொரு விளக்கை ஏற்றுங்கள்; மூன்றாவதாக மனித குல நன்மைக்காக ஒரு விளக்கை ஏற்றுங்கள். தமிழகம் முழுதும், மக்கள் இந்த மூன்று விளக்குகளையும் ஏற்ற வேண்டும். இதுபோன்ற சூழலில், உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து கொண்டாடினால் தான், நமக்கு முன்னேற்றமும், தீர்வும் கிடைக்கும்.அதேநேரம், நாட்டின் நெசவாளர்கள், பன்முகக் கலாசாரம் கொண்டவர்களாகவும், 120 வகையான கைத்தறிகளை கொண்ட, தேச துாதர்களாக உள்ளனர். எனவே, இந்த தீபாவளிக்கு நெசவாளர்களை போற்றும் வகையில், கைத்தறி ஆடைகளை அணிந்து, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அத்தொழிலையும் பாதுகாக்கவும் செய்வோம்.தமிழக மக்கள் அனைவருக்கும், தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar