Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப ... திருச்செந்துார், பழநியில் சஷ்டி விழா துவங்கியது திருச்செந்துார், பழநியில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 நவ
2020
08:11

 நீடாமங்கலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா நடந்தது.திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், தனி சன்னதியில், குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆண்டுதோறும், இக்கோவிலில், குருபெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கும். நேற்று இரவு, 9:48 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு, குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு யாகம், இரவு, 8:00க்கு, பஞ்சமூர்த்திகள் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால சிறப்பு மகா யாகம், காலை, 8:00க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை, 9:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குருபகவானை தரிசித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி, ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, குருபெயர்ச்சி விழாவில், ஒரு மணிநேரத்திற்கு, 200 பேர் வீதம், 14ம் தேதி முதல், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பதிவு பற்றி தெரியாத, வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால், நேரடி கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குருபெயர்ச்சி விழா ஹோமம், அபிஷேகம், குருபெயர்ச்சி மகா தீபாராதனை, யு - டியூப் மூலம், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. குருபகவான், இரவு, 9:48 மணிக்கு பெயர்ச்சி அடைந்தவுடன் தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar