Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு ... சேவுக பெருமாள் ஐயனார் கோவில் வைகாசி விழா துவக்கம்! சேவுக பெருமாள் ஐயனார் கோவில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2012
10:05

திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமியின் தங்கக்கொடி மரத்தில், அர்ச்சகர்கள் நந்தி கொடியேற்றியதை தொடர்ந்து, ஸ்வாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (மே 29) ஸ்வாமிகள், மலையில் இருந்து நகருக்குள் பிரவேசம் செய்கின்றனர்.ஜூன் 3ம் தேதி, அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமி காலை 10 மணிக்கு தனது பரிவாரங்களுடன் பெரிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அன்று மாலை 6 மணிக்கு, விநாயகர், செங்கோட்டுவேலவர் திருத்தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.ஜூன் 4ம் தேதி, பத்தாம்நாள் விழாவாக, அர்த்தநாரீஸ்வரர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 8ம் தேதி 14ம் நாள் விழாவாக அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமி, தனது பரிவாரங்கள் புடைசூழ திருமலைக்கு எழுந்தருளுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar