Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் ... திருச்செந்துார் கடற்கரையில் பக்தர்களின்றி சூரசம்ஹாரம் திருச்செந்துார் கடற்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலையில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

20 நவ
2020
06:11

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நடந்தது.

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இந்த அப்டேட் கண்ட சஷ்டி விழா, கடந்த, 15ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இவ்விழா, ஏழு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளில் இருந்து காலை, மாலை இருவேளையும் யாகசாலை பூஜை நடைபெற்றது. ஆறாம் நாளான இன்று கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நடந்தது. வழக்கமாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம். இந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, பகல், 1:00 முதல் மாலை, 5:00 மணி வரை, மலைமேல் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 2:40 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரத்திற்காக, பச்சைநாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், சூரபத்மன், பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், சுப்பிரமணிய சுவாமிக்கு, வெற்றி வாகை சூடும் நிகழ்ச்சியும், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. கந்த சஷ்டி ஏழாம் நாளான நாளை காலை, 7:00 மணி முதல் 8:30 மணிக்குள், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar