Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா ... பச்சமலையில் சூரசம்ஹாரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் முருகன் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
05:11

சேலம்: முருகன் கோவில்களில், பக்தர்கள் இல்லாமல், சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமத்தில், சூரசம்ஹார விழாவையொட்டி, நேற்று மாலை, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, சூரபத்மனை வதம் செய்யும் சம்ஹாரம் நடந்தது. இதில், குறைந்த அளவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணிக்கு, 1,008 லிட்டர் பால் அபி ?ஷகம், சிறப்பு பூஜை நடந்தது. அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியருக்கு, முத்தங்கி கவச சாத்துபடி, கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. இதில், நிர்வாகிகள் மட்டும் வழிபட்டனர்.

ஊத்துமலை முருகன், செவ்வாய்ப்பேட்டை, சித்திரைச்சாவடி முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், ஜாகீர்அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் ஆசிரமம் ஆகியவற்றில், சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு, பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இன்று, அனைத்து முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடக்கிறது.

வெற்றிவேல், வீரவேல் கோஷம்: சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி, கோவிலுக்கு உள்ளேயே நடந்தது. இதில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாலை, கையில் சக்திவேல் ஏந்தியபடி, கந்தசாமி போர்க்கோலத்தில் எழுந்தருளினார். அவருக்கு எதிரே, அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். இதைக்காண, திரளான பக்தர்கள் கோவில் முன் குவிந்தனர். அவர்கள், கோவில் உள்ளே நடக்கும் நிகழ்ச்சிகளை, பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அரோகரா, வெற்றிவேல், வீரவேல் கோஷம் முழங்க, கந்தசாமி கோவிலை சுற்றிவந்து, ஒவ்வொரு திசையில் யானை முக சூரன், சிங்கமுக சூரன், ஆடுமுக சூரன் இறுதியாக சூரபத்மனை, சக்திவேல் கொண்டு அழித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar