Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
28, 29ல் திருவண்ணாமலை நகருக்குள் ... பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேட்டு மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
05:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்ய கூடுதலாக, பக்தர்களை அனுமதிக்கக்கோரி, ஹிந்து முன்னணி சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. கடந்த, 17 முதல், ஆன்லைனில் பதிவு செய்த, 5,000 பேர் மட்டுமே கோவிலினுள் சென்று, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். கொரோனா ஊரடங்கால், கோவிலினுள் ஐந்தாம் பிரகாரத்தில் மட்டுமே சுவாமி உலா வருகிறது. இதை தரிசனம் செய்ய பக்தர்களை இதுவரை அனுமதிக்கவில்லை. வரும், 29ல், மஹா தீபத்தன்று பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தங்க கொடிமரம் முன், ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வும் நடக்கிறது. சுவாமி பிரகார வலத்தை கூடுதலான பக்தர்கள் தரிசனம் செய்யவும், மகா தீபத்தன்று கோவிலினுள், பஞ்ச மூர்த்திகள் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்யவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண்குமார் மற்றும் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar