Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைகோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... பெருமாள் கோவிலுக்கு உற்சவ குடை வழங்கும் விழா பெருமாள் கோவிலுக்கு உற்சவ குடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலவச திருமண மண்டபம் அய்யா கோவிலில் அடிக்கல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
03:11

 மணலிபுதுநகர்; அய்யா கோவிலில், இலவச திருமண மண்டபம் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமரிசையாக நடந்தது.சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலில் மைய சன்னிதியில், அய்யா வைகுண்ட பரம்பொருள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.கோவில் உட்பிரகாரத்தில், தியான மண்டபம், பதிவலம், ராஜகோபுரம் என, பிரமாண்டமாய் காட்சியளிக்கும், அய்யா கோவிலில், 36 அடி உயர தேரும் உள்ளது.


இங்கு, ஆண்டின், 365 நாட்களும் அன்னதானம் வழங்கப்படும்.இந்நிலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில், அன்னதான மண்டப கட்டடத்தின் முதல் தளத்தில், பிரமாண்ட இலவச திருமண மண்டபம் கட்டும் பணி, நேற்று துவங்கியது. அடிக்கற்கள், அய்யாவின் திருபாதங்களில் வைத்து, விசஷே பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.அடிக்கல் நாட்டு விழாவில், கோவில் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., நாராயணன் உள்ளிட்டோர், மேள தாளங்கள் முழங்க பதியில் இருந்து, அடிக்கற்களை தலையில் சுமந்தவாறு, ஊர்வலமாக சென்றனர்.பின், அன்னதான மண்டப முதல் தளத்தில், இலவச திருமண மண்டபம் கட்டும் பணிக்கான, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது, அய்யா உண்டு என்ற திருநாம உச்சரிப்புடன், அடிக்கல் இடப்பட்டது.பணிகள், விரைவில் முடிந்து திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு வரும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar