Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம் : மார்கழி ராசிபலன் மிதுனம் : மார்கழி பலன் மிதுனம் : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷபம் : மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : மார்கழி  பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12

கார்த்திகை 2, 3, 4ம் பாதம் : மார்கழி மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் நற்பலனையும், கடைசி வாரத்தில் சற்று சிரமத்தையும் எதிர்கொள்ள உள்ளீர்கள். உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன் எட்டில் அமர்ந்திருக்கும் நிலையில் ராசிநாதன் சுக்ரனும் ஜன.6 முதல் எட்டாம் வீட்டில் இணைவதால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவிற்கு வராமல் தள்ளிப் போகும். ஜன. 6 முதல் 13 வரை நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமையும். இதனால் உங்கள் இயலாமையானது சுற்றி உள்ளோரிடம் கோபமாக வெளிப்படலாம். முக்கியமான பணிகளுக்கு குடும்பத்தினரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். பண வரவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். குடும்ப செலவுகளுக்கு பட்ஜெட் போட்டு சமாளிப்பீர்கள். சிறுசிறு விஷயங்களுக்கும் வீண்வாதம் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் புதிய கலகங்கள் தோன்றும். பிரயாணத்தின்போது தெரியாதவர்களோடு பழகுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் லேசான மனக்கலக்கத்தைத் தரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகளை ஏற்காமல் அவரோடு வீண் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் வில்லங்க விவகாரங்கள் முளைக்கும். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் மேலதிகாரியோடு மோதல் போக்கினைக் காண நேரிடும். மாணவர்கள் உடன் படிக்கும் மாணவருக்கு உதவப்போய் சங்கடத்திற்கு ஆளாகலாம். மற்ற கிரகங்கள் சாதகமற்ற சூழலில் சஞ்சரித்தாலும் பிரதான கிரகங்களான குருவும் சனியும் சாதகமான பலன்களைத் தருவதால் நீங்கள் பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குருவின் பார்வை கூடுதல் பலத்தினைத் தரும். சனியின் பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மையைத் தரும். ஜென்ம ராசியில் ராகுவின் நீச பலம் சற்று அவசரத்தன்மையைத் தரும். நிதானம் தேவை என்பதோடு எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டிய மாதம் இது.


பரிகாரம்: நடராஜப்பெருமானை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 11

ரோகிணி :  ஜன. 5 வரை ராசிநாதன் சுக்ரனின் பார்வை பலம் நேரடியாக ராசியின் மீது விழுவதால் சிறப்பாக செயல்பட்டு வருவீர்கள். பாக்ய ஸ்தானத்தின் வலிமை இந்த மாதத்தில் உங்கள் நிலையை உயர்த்துகிறது. எந்த ஒரு காரியத்திலும் முதலில் தடை உருவானாலும் உங்கள் முயற்சியால் தடைகளைத் தகர்த்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனலாபம் சிறப்பாக உள்ளதால் சேமிப்பு உயர்வடையும். கடன் பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாகக் குறையும். அண்டை வீட்டார் தங்கள் வீட்டுப் பிரச்னைக்கு உங்கள் உதவியை நாடி வருவர். உறவினரின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். டிச. இறுதி வாரத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர் உதவி கேட்டு வரக்கூடும். பிள்ளைகளின் செயல்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். இரும்பு சத்து நிறைந்த கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. தம்பதியராக இணைந்து செயல்படும் காரியங்களில் சிறப்பான வெற்றி கிட்டும். ஜன. 6 முதல் ஆடம்பர செலவுகள் அதிகரிப்பதாக உணர்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் காண்பீர்கள். இந்த மாதத்தில் நிகழும் பெரிய மனிதர் ஒருவரின் சந்திப்பு உங்கள் வாழ்வினில் திருப்புமுனையை உண்டாக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பினை சுமக்க நேரிடும். மாணவர்கள் நேரத்தைக் கடைபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். முன்னேற்றம் காணும் மாதம் இது.


பரிகாரம் : சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு.
சந்திராஷ்டமம் : ஜன. 12

மிருகசீரிடம் 1, 2ம் பாதம் :  ராசிநாதன் சுக்ரன் மற்றும் குருவின் பார்வை பலம் உங்களுக்கு வலிமையை சேர்க்கிறது. நட்சத்திர அதிபதி செவ்வாய் 12ல் சஞ்சரிப்பதால் கூடுதல் அலைச்சலுக்கு ஆளாவீர்கள். என்றாலும் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருப்பதால்  கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கடுமையான அலைச்சலை சந்தித்தாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமாகும். மன உளைச்சல்கள் அதிகம் இருந்தாலும் குருபார்வையால் உற்சாகம் பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவும் இருந்து வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். என்ன செய்வதன்று தெரியாமல் தவிக்கும் இக்கட்டான சூழலில் எதிர்பாராத  உதவிகள் வந்து சேரும்.  புதிய நண்பர்களின் சந்திப்பு உதவிகரமாய் அமையும். வீடு, வண்டி, வாகனங்களில் மாற்றம் செய்ய முற்படுவீர்கள். உறவினர்களால் செலவு ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. அவர்களுடைய எதிர்கால நலம் கருதி சேமிப்பில் ஈடுபட நினைப்பீர்கள். கைக்கு வந்து சேரும் முந்தைய சேமிப்பினை அசையாச் சொத்துக்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளே தலைக்குமேல் இருக்கும்போது அடுத்தவர்களின் வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய முற்படுவீர்கள். அளவுக்கதிகமான வேலை பளு உங்களுடைய உடல்நிலையை சோதிக்கலாம். பணிச்சுமையின் காரணமாக வாழ்க்கைத்துணையுடன் செலவழிக்கும் நேரம் குறையும். நடக்காத ஒன்றினை நடந்ததாகக் கற்பனை செய்து கொண்டு மனதிற்குள் ஆதங்கப்படுவீர்கள். சாதுக்கள், சான்றோர்களுடனான சந்திப்பால் மகிழ்வீர்கள்.  தொலைதூர ஆன்மிகப் பயணத்திற்கான வாய்ப்பு வந்து சேரும். உங்கள் பகுதியில் நடைபெற உள்ள பொதுக்காரியம் ஒன்றை முன்நின்று செய்ய நேரிடும். தொழில்ரீதியாக அதிகளவு அலைச்சலை சந்திப்பீர்கள். கலைத்துறையினர்  அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டி வரும். பணிச்சுமை கூடும் மாதம் இது.

பரிகாரம் : கந்தனை வழிபட கவலை தீரும்.
சந்திராஷ்டமம் : டிச. 16, ஜன. 12,

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தி ராம ஜென்மபூமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar