Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : மார்கழி பலன் சிம்மம் : மார்கழி பலன் சிம்மம் : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடகம் : மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
கடகம் : மார்கழி பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12


புனர்பூசம் 4ம் பாதம் :  உங்கள் நட்சத்திர அதிபதி குருவின் பார்வை பலம் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். நினைத்த பணிகள் எளிதில் முடிவதால் உற்சாகத்துடன் செயல்பட்டு வருவீர்கள். இதுநாள் வரை தயக்கத்தின் காரணமாக நிறுத்தி வைத்திருந்த பணிகளை தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தின் காரணமாக சுதந்திரமாகச் செயல்படாமல் தவித்து வந்த உங்களுக்கு இந்த மாத கிரக நிலை துணை நிற்கும். குடும்பத்தில் லேசான சலசலப்பிற்கு இடையே கலகலப்பான சூழல் நிலவும். பேச்சினில் நகைச்சுவை கலந்திருக்கும். பண வரவு சிறப்பாக உள்ளது. சேமிப்பு உயர்வடையும். அதே நேரத்தில் உங்களிடமிருந்து கடன் வாங்கியவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஒருசிலர் வீண்பழி சுமக்க நேரிடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. எரிபொருட்களைக் கையாளும்போது அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். உடன்பிறந்தோரிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவி கிட்டும். அண்டை வீட்டாரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். எதிர்பாராத பிரயாணத்திற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். மனதில் தோன்றும் சந்தேகங்களை உரியவர்களிடம் அவ்வப்போது தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் தங்கள் உழைப்பிற்கான பரிசினைப் பெறுவர். மாணவ, மாணவியர் தங்கள் எழுத்துத்திறமையை உயர்த்திக் கொள்ளும் நேரம் இது. நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.


பரிகாரம் : ஸ்ரீராமர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 19

பூசம் :  குருவின் பார்வை பலத்துடன் இந்த மாதத்தில் நிகழ உள்ள சனிப்பெயர்ச்சியின் மூலம் நட்சத்திர அதிபதி சனியின் பார்வை பலமும் ராசியின் மீது விழுவதால் மன உறுதியுடன் செயல்பட்டு வருவீர்கள். எதற்கெடுத்தாலும் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அதே நேரத்தில் இதுவரை கண்ட சிரமத்தினால் ஒருவிதமான மனவைராக்கியத்துடன் இருந்து வருவீர்கள். நீச பலம் பெற்றாலும் ஜென்ம ராசியின் மீது பார்வையை செலுத்தும் குரு பகவான் உங்களது வைராக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பார். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் எந்தவித முன்னேற்றமுமின்றி அப்படியே நிற்பதைக் கண்டு மனம் வருந்துவீர்கள். உங்களுக்குத் தேவையான அளவிற்கு பொருள் வரவு சீராக இருந்து வரும். உடன் பிறந்தவர்களால் உபயோகம் உண்டாகும்.


புதிய நண்பர்களிடமிருந்து நிறைய பாடம் கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகி அவர்களால் செலவினங்களுக்கு ஆளாவீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களும், கனவுகளும் செயல்வடிவம் பெற அயராது உழைத்து வருவீர்கள். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்ச்சிகள் உண்டாவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவீர்கள். வாழ்க்கைத்துணையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அவருக்கு மிகவும் பிடித்தமான பொருள் ஒன்றினை வாங்க கூடுதலாக செலவழிக்க நேரிடும். வியாபாரிகள் தாங்கள் அடைந்து வரும் லாபத்தில் ஒரு பகுதியை தான தர்மத்திற்கு செலவழிக்க வேண்டி வரும். ஆன்மீகப் பெரியோர்கள், சான்றோர்கள் ஆகியோருடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கௌரவத்துடன் கூடிய நற்பெயரை அடைவார்கள். கலைத்துறையினர் தங்கள் கற்பனைகள் செயல்வடிவம் பெறக் காண்பர். நன்மை தரும் மாதம் இது.


பரிகாரம் :  நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 20

ஆயில்யம்:   டிச. 30 வரை நட்சத்திர அதிபதி புதன் ஆறில் சஞ்சரிப்பதால் போராட்டமான சூழலைக் கண்டு வருவீர்கள். ஆறில் புதனோடு சூரியன் மற்றும் சனியின் அமர்வு எடுத்த காரியத்தினை எளிதில் முடிக்க விடாமல் செய்யும். எதிலும் போராடி வெற்றி பெற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் குருவின் பார்வை பலத்தினைப் பெறுவதால் நெருக்கடியான சூழலிலும் கூட அசாத்தியமான தைரியத்துடன் செயலாற்றி வருவீர்கள். டிசம்பர் இறுதியில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் ஒருசில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். வண்டி வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். தாயார் வழி உறவினர்களால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும். அடிக்கடி உண்டாகும் டென்ஷனால் ஞாபக மறதிக்கு ஆளாவீர்கள். இதனால் முக்கியமான நேரத்தில் இழப்பு உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளால் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். கேளிக்கை, கொண்டாட்டங்கள் ஆகியவற்றை மனம் விரும்பும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக அதிகம் செலவழிப்பீர்கள். நரம்புத் தளர்ச்சி, அசதி, சோர்வு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். வாழ்க்கைத்துணை எல்லாவற்றையும் ஏறுக்கு மாறாக செய்கிறார் என்று மன வருத்தம் கொள்வீர்கள். ஆயினும் அவரது துணையின்றி எடுத்த காரியத்தை செய்து முடிக்கத் தயங்குவீர்கள். வண்டி வாகனங்களை இயக்கும்போது சிறப்பு கவனம் செலுத்தவும். தொழில் ரீதியாக மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்பதால் அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லதல்ல. நீங்களே முன்னின்று செய்யும் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கலைத்துறையில் நண்பர்கள் எதிரிகளாக மாறும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை. கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதம் இது.    

பரிகாரம் : கருடாழ்வாரை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 21

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar