Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ... சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டில்லி குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
டில்லி குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

பதிவு செய்த நாள்

21 டிச
2020
12:12

புதுடில்லி:சீக்கிய மத குரு, குரு தேஜ் பகதுாரின் நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள ரகாப் கஞ்ச் குருத்வாராவில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், கடந்த சில வாரங்களாக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெரும்பாலானோர், பஞ்சாபை சேர்ந்த சீக்கியர்கள்.

திடீர் வருகை: இதற்கிடையே, சீக்கிய மதத்தின் ஒன்பதாவது மத குருவான, குரு தேஜ் பகதுாரின் நினைவு தினம், நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. டில்லியில் உள்ள, ரகாப் கஞ்ச் குருத்வாராவில், குருதேஜ் பகதுாரின் உடல், 1675ல் தகனம் செய்யப்பட்டது.எனவே, இந்த குருத்வாராவில், அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்நிலையில், அந்த குருத்வாராவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை வருகை தந்தார். குருத்வாராவில், பிரதமர் மோடி, சீக்கிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தினார். பிரதமரின் இந்த திடீர் வருகையால், குருத்வாராவில், பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்படவில்லை. பக்தர்களை கட்டுப்படுத்த எந்தத் தடைகளும் விதிக்கப்படவில்லை.

நானும் ஒருவன்:  இதுகுறித்து, பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:இன்று காலை, குரு தேஜ் பகதுார் உடல் தகனம் செய்யப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க ரகாப் கஞ்ச் குருத்வாராவில், வழிபாடு செய்தேன்.நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். குரு தேஜ் பகதுாரின் கருணையால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களில், நானும் ஒருவன்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar