மக்களில் பலர் ஏழையாக இருக்கிறோமே என்ற ஏக்கத்தில் வாழ்கிறார்கள். வறுமை உண்டாவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. எந்த குடும்பத்தில் குழந்தைகள் காரணமின்றி திட்டப்படுகிறார்களோ அவர்களின் வீட்டை நோக்கி வறுமை வரும். காண்போர் மனம் ஏங்கவும், பிறரை கவர்ந்திழுக்கும் விதத்தில் ஆடை, ஆபரணம் அணிபவர்களுக்கு வறுமை உண்டாகும். வீட்டில் சிலந்திப் பூச்சிகள் இருந்தால் அவற்றை அகற்றுங்கள். இல்லாவிட்டால் அது வறுமையை இழுத்து வரும். ‘‘வறுமை இழிவான ஒன்றல்ல. மரணத்திற்குப் பிறகு இறைவன் முன்னிலையில் வறுமை நிலையில் இருப்பவருக்கு முன்னுரிமை கிடைக்கும்’’ என்கிறார் நாயகம்.