Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமலை ரங்கநாதர் கோவில் வைகுண்ட ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சொர்க்க வாசல் திறப்பு: சிறப்பு ஏற்பாடுகள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
9 மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் திறப்பு
எழுத்தின் அளவு:
9 மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் திறப்பு

பதிவு செய்த நாள்

24 டிச
2020
08:12

 புவனேஸ்வர் : கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக நேற்று (டிச.,23) திறக்கப்பட்டது. ஜன.,3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்றை தொடர்ந்து, ஒன்பது மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் நேற்று (டிச.,23) பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. அத்துடன் முக்கிய தெய்வங்களான பாலபத்ரா, தேவி சுபத்ரா மற்றும் ஜெகநாத் ஆகியோரின் எதிர்பார்க்கப்பட்ட தரிசனம் காலை 7 மணி முதல் துவங்கியது. ஜெகந்நாத்தின் தரிசனம் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்யவான்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

கோவில் திறக்கப்பட்ட முதல் 3 நாட்கள் (டிச.,23, 24,25) ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கோவில் சேவையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பூரி கலெக்டர் பல்வந்த் சிங் கூறினார். மேலும் அடையாள சான்று, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்து கொள்வது போன்ற சுகாதார நடவடிக்கையை பின்பற்றுவது அவசியம். கோவில் சேவையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் மூன்று நாட்களில் தெய்வங்களின் தரிசனம் அனுமதிக்கப்படும். பூரியில் வசிப்பவர்கள் டிச., 26 முதல் டிச.,31 மாலை வரை கோயிலுக்குள் நுழைய அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டையொட்டி ஜன.,1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கோவில் மீண்டும் மூடப்படும். பின் ஜன., 3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக செய்யப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் அறிக்கை கொண்டு வர வேண்டும். பூக்கள் போன்ற பூஜை பொருட்கள் அனுமதியில்லை. அத்துடன் உள்ளூர் மக்களின் கொரோனா நிலையை அரசு அறிந்திருப்பதால் அவர்களுக்கு சோதனை சான்றிதழ் அறிக்கை தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுடன் ஜெகந்நாதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar