Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா ... தஞ்சை பெரியகோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தஞ்சை பெரியகோவிலில் நடராஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை இணையதளத்தில் சோலைமலை முருகன் கோயில்
எழுத்தின் அளவு:
அறநிலையத்துறை இணையதளத்தில் சோலைமலை முருகன் கோயில்

பதிவு செய்த நாள்

30 டிச
2020
11:12

மதுரை : மதுரை கள்ளழகர் கோயில் பெயருடன் சேர்த்து, சோலைமலை முருகன் கோயில் பெயரையும் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.

மதுரை சோமசுந்தரம் தாக்கல் செய்த மனு:மதுரை அழகர்மலையில் சோலைமலை முருகன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை இணையதளத்தில் கள்ளழகர் கோயில் மட்டும் இடம் பெற்றுள்ளது. அதனுடன் சேர்த்து சோலைமலை முருகன் கோயிலும் இடம் பெற வலியுறுத்தி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சோம சுந்தரம் குறிப்பிட்டார். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதார் தரப்பு, சோலைமலை முருகன் கோயில் மண்டபமானது கள்ளழகர் கோயில் தேவஸ்தானத்துடன் சேர்ந்தது என இந்நீதிமன்றம் ஒரு வழக்கின் அடிப்படையில் உத்தரவிட்டது. ஆனால் இணைய தளத்திலிருந்து சோலைமலை முருகன் கோயில் பெயரை நீக்கிவிட்டனர். மனு அளித்தும் நடவடிக்கை இல்லை, என தெரிவித்தது.

நீதிபதிகள் உத்தரவு: கள்ளழகர் கோயில் மற்றும் அத்துடன் சோலைமலை முருகன் கோயிலுக்கும் சேர்த்து பரம்பரை அல்லாத அறங்காவலர் நியமனம் தொடர்பாக 2009ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சோலைமலை முருகன் கோயில் சொத்துக்கள் கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது என இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கள்ளழகர் கோயில் பெயருடன் சேர்த்து, சோலைமலை முருகன் கோயில் பெயரையும் இணையதளத்தில் வெளியிட வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அவ்வாறு இடம்பெறச் செய்ய வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar