Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் கோவிலில் புத்தாண்டு ... ஆருத்ரா தரிசனத்தையொட்டி பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி பஞ்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒன்பது மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் நடராஜர் வீதியுலா
எழுத்தின் அளவு:
ஒன்பது மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் நடராஜர் வீதியுலா

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
02:01

திருவண்ணாமலை: ஒன்பது மாதங்களுக்கு பிறகு, ஆருத்ரா தரிசனத்தையொட்டி, திருவண்ணாமலை, மாடவீதியில் நடராஜர் வீதியுலா நடந்தது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், சுவாமி மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவில் பிரகாரத்துக்குள் மட்டும் சுவாமி பிரகார உலா நடந்து வந்தது. கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் நடந்த, சுவாமி உலாவுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில், பக்தர்கள் கோரிக்கையால், கோவிலில் நடக்கும் விழாக்களுக்கு, சில தளர்வுகளை, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. நேற்று, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில், நேற்று அதிகாலை, சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளினார். நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அப்போது, தீபதிருவிழாவின் மகா தீப மை, நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சிவகாமி சுந்தரி சமேத நடராஜர், திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு, மாடவீதியில் பவனி வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒன்பது மாதங்களுக்கு பிறகு, மாட வீதியில், சுவாமி உலாவை பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar