Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளப்பட்டியில் 600 ஆண்டுகள் ... மாசாணியம்மன் கோவில் அமாவாசை இரவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் தேதி போகி பண்டிகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
13ம் தேதி போகி பண்டிகை

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
11:01

வரும், 13ம் தேதி போகி பண்டிகை... வீட்டில் வேண்டாத குப்பைகளை எரிப்பது மட்டுமல்ல, காப்பு கட்டு சடங்கும் முக்கியமாக நடக்கும். இன்று ஆன்ட்ராய்டில் புகுந்து விளையாடும் குழந்தைகளுக்கு தெரியாமல் இருக்கலாம். இது வெறும் சடங்கல்ல. ஆதி தமிழனின் மருத்துவ அறிவு.அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்வது நம் கடமை.


பெரிதாக மெனக்கெட வேண்டாம். காப்பு கட்டும் போது, எதற்காக கட்டுகிறோம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் போதும் என்கிறார் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி.அவரிடம் தொடர்ந்து பேசுகையில்...மார்கழி கடைசி நாள் போகி. வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள் மாவிலை தோரணத்துடன் தை மகளை வரவேற்பது நம் மரபு. படிப்பறிவில்லாத அந்த காலத்தில் அறிவியலை இதுபோன்ற சடங்குகள் மூலம்தான், நம் முன்னோர் புரிய வைத்தனர்.காப்பு கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய, முதலுதவி பெட்டி. விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றப்போக்கு போன்ற சிறுசிறு பிரச்னைகளுக்கு தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை அதில் அடங்கியிருக்கும்.பிரண்டை, தும்பை இப்போது பெரிதும் பயன்படுத்துவதில்லை. உடல் சூட்டை தடுக்க அற்புதமான மூலிகை ஆவாரை. இப்போது காசு கொடுத்தால்தான் கிடைக்கிறது. இன்றும் தாராபுரம், வெள்ளக்கோவில், காங்கயம் பகுதியில் பூத்துக்கிடப்பதால், மக்களே பறித்து பயன்படுத்துகின்றனர். தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன், அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்தால் அவ்வளவு புத்துணர்ச்சி.சிறுநீர் கல்லை உடைக்கும் சக்தி பீளைப்பூவுக்கு உண்டு. வேப்பிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. மிகச்சிறந்த கிருமிநாசினி. இந்த அடிப்படையிலேதான் காப்பு கட்டை, சடங்காக்கி ஆரோக்கியத்தை பேணிக்காத்தனர் நம் முன்னோர்கள் என்பதை, சுட்டீஸ்களுக்கும் சொல்லி கொடுங்களேன்...!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar