Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையத்தில் பொங்கல் விழா சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி: பக்தர்கள் தரிசனம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கலோ பொங்கல் களை கட்டிய கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பொங்கலோ பொங்கல் களை கட்டிய கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2021
07:01

 திருப்பூர் : திருப்பூர் வட்டாரத்தில் பள்ளிகள் மற்றும் பொது அமைப்புகளின் சார்பில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமூக இடைவெளியுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை வகித்தார். முதல்வர் அனிதா, ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்தனர். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்பள்ளியில், காப்பு கட்டில் தொடங்கி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களிலும் நடக்கும் பொங்கல் திருவிழாவின் மகத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொண்டனர். முளைப்பாரி எடுத்து விநாயகரை வழிபட்டு, பாட்டுப்பாடி, கும்மியடித்து பொங்கல் வைத்தனர். கயிறு இழுத்தல், உறி அடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் என விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர், பெருமாள் கோவில் வீதி அருகேயுள்ள ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் காலேஜில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நோய்த்தொற்று பரவலில் இருந்து அனைவரும் விடுபட்டு, 2021ம் ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமைய வேண்டி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தாளாளர் கீதா, முதல்வர் தங்கராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தியன் ரெட் கிராஸ் சொசடை்டியின், மாவட்ட கிளை சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். செயலாளர் தாமரோதரன் வரவேற்றார். பொருளாளர் சுப்பிரமணியம், இணை செயலாளர் புரு ேஷாத்தமன் பங்கேற்றனர். திருப்பூர் நிப்ட் - டீ கல்லுாரியில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வளாகத்தில் உள்ள வித்ய விநாயகருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, பொங்கல் வைத்தனர். மஞ்சள், கரும்பு, பொங்கலுடன், படையலிட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், முதல்வர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டிரீம் -20 பசுமை அமைப்பு மற்றும் நெகிழி இல்லா திருப்பூர் அமைப்புகள் சார்பில், கொடிக்கம்பம் மெயின் ரோடு பகுதியில் உள்ள, சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் நேற்று, மரப்பொங்கல் விழா நடந்தது. சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. பசுமையை வளர்க்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொங்கல் வைத்து, மரக்கன்றுகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar