Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோயில்களில் பொங்கல் ... மாட்டு பொங்கலில் பூஜையின் போது பிறந்த கன்றுகள் மாட்டு பொங்கலில் பூஜையின் போது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்தாலும் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
மழை பெய்தாலும் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
03:01

 திருப்பூர்: தமிழர் திருநாள் பொங்கல் விழா நேற்று திருப்பூரில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் பண்டிகையை கொண்டாடினர். வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன வாசல்களில், பல வண்ண கோலங்கள் வரைந்து பண்டிகையை வரவேற்றனர்.

விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ள சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில், வாசலில் கோலமிட்டு விறகு அடுப்பு மூட்டி, புதுப்பானையில், புத்தரிசியுடன் பொங்கல் வைக்கப்பட்டது. கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து வைத்து பூஜை நடந்தது.குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கி, வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில், 70 சதவீதம் பேர், பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.சிறப்பு வழிபாடுமார்கழி மாத நிறைவு, தை மாதப் பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. காலை முதல் மாலை வரை மக்கள் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டனர்.கடை வீதியில் கூட்டம்பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க, நேற்று முன்தினம் கடைவீதிகளில் குவிந்தனர். அன்று மாலை கனத்த மழை பெய்ததால், மக்கள் அவதிப்பட்டனர். அதனால், நேற்று காலை முதலே பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பஸ்கள் நிரம்பியது பொங்கல் பண்டிகை விடுமுறை என்ற நிலையிலும், திருப்பூரில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் நேற்று காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொங்கல் கொண்டாட்டத்துக்கு வெளியூர் செல்வோர், திருப்பூர் வந்தோர் என பயணிகள் கூட்டம் வழக்கம் போல் பரபரப்பாக காணப்பட்டது.ரசிகர்களுக்கு விருந்துபொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் என இரண்டு சினிமா ரிலீஸ் ஆனது. கொரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கையில், அரசு உத்தரவால், 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் புக்கிங், ரிசர்வேசனில் மட்டும் டிக்கெட் விற்கப்பட்டது. இதனால், தியேட்டர்களில் தள்ளுமுள்ளு இன்றி, ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது.வாகன நெரிசல் இல்லைபொங்கல் விடுமுறை காரணமாக, திருப்பூரில் வழக்கமாக காணப்படும், வாகன நெரிசல் இல்லை. முக்கிய ரோடுகளில், குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே இயங்கின. இதனால், போக்குவரத்து நெரிசல் பெரிதாக இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar