Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ... பழநி பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு வசதி பழநி பாதயாத்திரை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் தை கிருத்திகை விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணியில் தை கிருத்திகை விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
06:01

 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தைக்கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, தை கிருத்திகை என்பதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதுதவிர மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். கட்டண தரிசனத்தில், இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றத்தில், சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், தை கிருத்திகை உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, மலைக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு, உற்வசர் மற்றும் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், உள் புறப்பாடு எழுந்தருளினார்.இதே போல், நெடியம், கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலிலும், நேற்று, தை கிருத்திகை சிறப்பு தரிசனம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar