Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் ... குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் தேசிய கொடி ஏற்றி மசூதி கட்டும் பணி துவங்கியது
எழுத்தின் அளவு:
அயோத்தியில் தேசிய கொடி ஏற்றி மசூதி கட்டும் பணி துவங்கியது

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
12:01

அயோத்தி :அயோத்தியில், ஐந்து ஏக்கர் நிலத்தில், தேசிய கொடி ஏற்றி, மரக்கன்றுகளை நட்டு, மசூதி கட்டும் பணியை, இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை, நேற்று
துவக்கியது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி, கடந்த, 2019 நவம்பரில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பில், மசூதி கட்டுவதற்கு, அயோத்தியில், ஐந்து ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்திடம் வழங்க வேண்டும் என, உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அயோத்தி அருகே, ஐந்து ஏக்கர் நிலத்தை, உ.பி., அரசு வழங்கியது. இந்த நிலத்தில் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியம் சார்பில், இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை அமைக்கப்பட்டது.இந்நிலையில், அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தில், மசூதி கட்டும் பணி நேற்று துவங்கியது. இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அகமது பரூக்கி, தேசிய கொடியை ஏற்றினார்.தொடர்ந்து, அறக்கட்டளையின், 12 உறுப்பினர்களும் மரக்கன்றுகளை நட்டு, மசூதி கட்டும் பணியை துவக்கி வைத்தனர். பின், பரூக்கி கூறியதாவது: நிலத்தில் மண் பரிசோதனை நடந்து வருகிறது, பரிசோதனை முடிவுகள் வெளிவந்து, வரைபடத்துக்கு அனுமதி பெற்ற பின், கட்டுமானபணி துவங்கும். மசூதி கட்ட, மக்கள் இப்போதே நிதி அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த மாதம், இந்திய- இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை, புதிய மசூதிக்கான வரைபடத்தை வெளியிட்டது.மசூதி வளாகத்தில் மருத்துவமனை, நுாலகம், சமுதாய கூடம், மியூசியம் போன்றவையும் இடம் பெறும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. மசூதிக்கு, 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போரில், உயிர் தியாகம் செய்த மவுல்வி அகமதுல்லா ஷா பெயரை வைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar