Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... மருதமலையில் தைப்பூசம் விழா: பக்தர்கள் தரிசனம் மருதமலையில் தைப்பூசம் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
09:01

வடலுார்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 7:30 மணியளவில், தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 10:30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.இன்று தைப்பூச தினத்தையொட்டி, காலை, 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இன்று, தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். மாலை, 6:00 மணியளவில், மகாமந்திரம் ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக, அரசின் வழிகாட்டுதலோடு விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar