Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமகிரி தேர் வெள்ளோட்டம் திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலஞ்சேரியில் அவ்வையார் உருவாக்கிய சுனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
10:01

 கி.பி., 2ம் நுாற்றாண்டு முதல், 18ம் நுாற்றாண்டு வரை, பல்வேறு கட்டங்களில் வாழ்ந்ததாக கூறப்படும் நான்கு அவ்வையாருக்கு, தமிழகத்தில், சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரியில், அவ்வையாருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, அவ்வை ஏற்படுத்தியதாக கூறப்படும் சுனை, பல நுாற்றாண்டுகளாக, வற்றாத நீர் நிலையாக இருந்து வருகிறது.இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது:பல நுாற்றாண்டுகளுக்கு முன், ஆலஞ்சேரிக்கு, ஒரு நாயுடன் வந்த அவ்வையார், பசியுடன் இருப்பதாக கூறியதால், இப்பகுதிவாசிகள், கூழ் கொடுத்துள்ளனர்.கூழை வாங்கிய அவ்வையார், தன் காலால் தரையில் அழுத்தி பள்ளம் ஏற்படுத்தி, முதலில் நாய்க்கு கூழ் ஊற்றி, மீதமுள்ள கூழை குடித்துள்ளார்.அங்குள்ள ஆலமரத்தில் அமர்ந்து, ஆலஞ்சேரி பகுதிவாசிகளை வாழ்த்தி, பாடல் பாடியுள்ளார்.நாய்க்கு கூழ் ஊற்ற பள்ளமிட்ட இடத்தில், நீரூற்று ஏற்பட்டு சுனையாக மாறியதாக கூறுகின்றனர். அன்று முதல், எந்த காலத்திலும் வற்றாத சுனையாக இருக்கிறது. அருகில் உள்ள ஏரி வறண்டாலும், சுனை வற்றுவதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சிட்டி/ ஏரியா பொது பக்கம்/ வரலாறுசித்திரையில் விழாஆலஞ்சேரி கிராமத்திற்கு, சித்திரை மாதத்தில் அவ்வையார் வந்ததால், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், அவ்வையார் கோவிலில், சித்திரை திருவிழா மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது.முதல் நாள், கொடியேற்று விழாவில், பச்சை நிறத்தில் கொடியேற்றப்படும். இரண்டாம் நாள், அவ்வையார் சிலைக்கு அபிஷேகம்; மூன்றாம் நாள் விழாவில், காலையில், 40 கிலோ எடையுள்ள வெண்கல சிலை அவ்வையார் வீதியுலா நடைபெறுகிறது.வீதியுலா முடிந்ததும், அவ்வையாருக்கு கூழ் ஊற்றுவதற்கு முன், நாய்க்கு கூழ் ஊற்றுவது வழக்கமாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar