சேலம்: சேலம், மரவனேரி காமகோடி காமாட்சி மண்டபத்தில், லோக ?ஷம திருவிளக்கு பூஜை, நேற்று நடந்தது. சேலம் மாவட்ட பிராமணர் சங்கத்தலைவர் சீனிவாசன் தொடங்கிவைத்தார். அதில், 120 பெண்கள், விளக்கேற்றி, உலக நன்மை, கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, மகளிர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.