Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் கட்ட நிதி சேகரிப்பு ... மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் மேட்டுக்குப்பத்தில் திருஅறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

31 ஜன
2021
10:01

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், வடநெற்குணம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - மரக்காணம் சாலையில், ஆலங்குப்பத்திற்கு அருகே உள்ளது வடநெற்குணம். இங்குள்ள மாசியப்பன் கோவிலில், பழமையான புடைப்பு சிற்பமாக அய்யனார் உள்ளதை, அன்னம்பாக்கம் தனபால் கண்டுபிடித்து, உ.வே.சா., நுாலக காப்பாட்சியர் கோ.உத்திராடம் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் பூபாலன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஆய்வு செய்தனர்.

குண்டலம்: இதுகுறித்து, கோ.உத்திராடம் கூறியதாவது:அய்யனார் புடைப்பு சிற்பம், 4 அடி உயரமுள்ள பலகை கல்லில், வலதுகால் கோலத்தில் பீடத்தின் மேல் குத்திட்டும், இடது கால் மடித்தும் அமர்ந்த நிலையிலும், சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அய்யனாரின் தலையில் சடாமுடி தரித்து, தோள்களில் படுமளவுக்கு நீண்ட காதுகளில் குண்டலம் அணிந்து, வலது கையில் செண்டைப் பிடித்தும், இடது கையை தொடை மீது வைத்தும் அமர்ந்து உள்ளார்.

கழுத்தில் அணிகலன், மார்பில் முப்புரிநுால், மேல் கையில் தோள்வளை, மணிக்கட்டில் காப்பு, இடையில் இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அய்யனாருக்கு அழகு செய்கின்றன. புடைப்பு சிற்பம்அய்யனாரின் தலையை ஒட்டி சாமரமும், குடையும் காட்டப்பட்டு உள்ளது. இடதுபுரம் அழகிய குதிரை, பீடத்தின் அருகில் நாய்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தோற்றத்தை வைத்து, இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தில் வடிக்கப்பட்ட, புடைப்பு சிற்பமாக இருக்க வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்தை சேர்ந்த அய்யனார் சிற்பங்கள், விழுப்புரத்தின் ஆலகிராமம், கிளியனுார், நெற்குணம், செண்டியம்பாக்கம், தென்பேர், பிடாகம், கொண்டங்கி, ஒரு கோடி, சித்தேரிக்கரை ஆகிய ஊர்களில் உள்ளன. அதேபோல, சோழர் காலத்தை சேர்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்களும் இவ்வூரில் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar