Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி நாராயண பெருமாள் கோயில் ... அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி சங்கரமடத்தில் உண்டியல் வைப்பு
எழுத்தின் அளவு:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி சங்கரமடத்தில் உண்டியல் வைப்பு

பதிவு செய்த நாள்

31 ஜன
2021
10:01

காஞ்சிபுரம்:அயோத்தி ராமர் பூமியில், கோவில் கட்டுமான பணிக்கு, பொதுமக்கள் நிதி வழங்க, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், நாளை காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, உண்டியல் வைக்கப்பட்டு, நிதி சேகரிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராம ஜன்ம பூமி குறித்த வரலாற்று, தொல்லியல் உண்மைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றது.விழிப்புணர்வு பிரசாரம்இதையடுத்து, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு, பிப்ரவரியில் அமைக்கப்பட்டது.

ராமர் பூமியில் கோவில் கட்டுமான பணி குறித்து, ஜன., 15 முதல், பிப்., 27 வரை, மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.இதில், கோவில் கட்டும் பணியில் பொதுமக்கள் பங்கேற்பது குறித்து விளக்கி, நன்கொடைகள் பெறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், நிதி சேகரிக்க உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, காஞ்சிபுரம் சங்கர மடம் மேலாளர் சுந்தரேச அய்யர், நிருபர்களிடம், கூறியதாவது: ராமர் கோவில் கட்டுமான பணிக்கு காணிக்கை வழங்குவது குறித்து, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம், ஆட்டோ மூலமாக, விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட உள்ளது.கோவில் கட்டுமான பணிக்கு, பக்தர்கள் நிதி வழங்கும் வகையில், சங்கர மடத்தில், நாளை காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பெரிய உண்டியல் வைக்கப்படும். இதில், எவ்வளவு தொகை வேண்டுமானாலும், பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தலாம். ராமர் கோவில் கட்டுமான பணிக்காக, காலை, 9:15 மணி முதல், பகல், 12:45 மணி வரை, விசேஷ யாகம் நடத்தப்பட உள்ளது.சென்னையைச் சேர்ந்த, 12 வேத விற்பன்னர்கள் பங்கேற்கும், ராம மூலமந்திர யாகம் எனப்படும் ராமசடாக்ஹரி யாகம் நடத்தப்பட உள்ளது.

உடுப்பி பெஜாவர்: பொதுமக்கள் வழங்கிய நிதி, மாலை, 5:30 மணிக்கு, காஞ்சிபுரம் சங்கரமடம் மடாதிபதி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், சங்கரமடம் சார்பில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மூலமாக, ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்டின் பொருளாளர் கோவிந்த தேவ்கிரி சுவாமிகளிடம் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதியும், ராமர் கோவில் நிர்மானத்திற்கான தென்மாநில பிரதிநிதியுமான, விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமி பங்கேற்கிறார்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.தொடர்புக்கு: 98408 33575

சென்னையில் எங்கே?: ராமர் கோவிலுக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி, சென்னை நங்கநல்லுார், மூவரசம்பட்டு சாலையில் உள்ள, பெரிய பாளையத்து அம்மன் கோவிலில், இன்று காலை நடக்கிறது. காமாட்சி சுவாமிகள் தலைமையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பெஜாவர் மடத்தின் மடாதிபதியும், ராமர் கோவில் நிர்மானத்திற்கான தென்மாநில பிரதிநிதியுமான, விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமி பங்கேற்று சிறப்புரைஆற்றுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar