Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்; ... லட்டு கவர் பிரச்னைக்கு திருப்பதியில் சுமுக தீர்வு லட்டு கவர் பிரச்னைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூச விழா தெப்போற்ஸவத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பழநி தைப்பூச விழா தெப்போற்ஸவத்துடன் நிறைவு

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
10:02

பழநி: பழநி தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்குதலுடன் நிறைவடைந்தது. நேற்று நடந்த தெப்போற்ஸவத்தை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில், ஜன.,22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சமேத திருவுலா வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, தங்கக்குதிரை, பெரிய தங்க மயில் வாகனங்களில் நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம் ஜன.,27ல் நடந்தது. தைப்பூசத்தன்று (ஜன.,28) தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தைப்பூச விழாவின் 10ம் நாளான நேற்று இரவு பெரியநாயகிம்மன் கோயில் அருகே தெப்பக்குள மைய மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். யாகபூஜை அபிேஷகம், தீபாராதனை நடந்தது.

வாணவேடிக்கை மத்தியில் வண்ண மின்விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் குளத்தை வலம் வந்தார். செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர். சித்தனாதன் அன்ட் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 11:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்கத்துடன் தைப்பூசவிழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar