Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருதுநகரில் குதிரைவீரன் நடுகற்கள் ராமேஸ்வரம் தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடினர் ராமேஸ்வரம் தீர்த்தங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: கலைஞர்கள் இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: கலைஞர்கள் இசை அஞ்சலி

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
10:02

தஞ்சாவூர்: - திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழாவை முன்னிட்டு,  நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில், இசை கலைஞர்கள் பங்கேற்று, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் ஐந்து நாள்கள் நடக்கும் ஆராதனை விழா இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக இரண்டுகள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில், திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று மாலை விழா துவங்கியது.  இன்று (2ம் தேதி) ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான, பஞ்சரத்ன கீர்த்தனையை யொட்டி, காலை 5: 30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, சாலை வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர். விழா பந்தலில் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது.

பிறகு, மங்கள இசை துவங்கியது. தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் நடந்தன.  சரியாக, 9:00 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக... என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ... என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த லாதிஞ்சநெ ஓ மநஸே... என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த கனகன ருசி ராக நகவஸந நிந்நு... என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு... ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, பின், உபன்யாசம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் இடத்திற்கு வந்த இசைக்கலைஞர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் தர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே அமைதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குறைந்தளவிலான நபர்களை அனுமதிப்பட்டு இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar