Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதிக்கு பக்தர்கள் நடைபயணம் ... மேல்மலையனுாரில் அமாவாசை பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகநாதபெருமாள் கோவிலில் உதய கருட சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜெகநாதபெருமாள் கோவிலில் உதய கருட சேவை

பதிவு செய்த நாள்

11 பிப்
2021
04:02

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் உதயகருட சேவை இன்று நடந்தது.

இதையொட்டி, நேற்று பூர்வாங்க பூஜைகளும், மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், செண்பகவல்லி தாயார் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள், மகா திருமஞ்சனம் நடைபெற்றது.


இதையடுத்து உற்சவர் பெருமாள் இன்று தங்க கருட சேவை அலங்காரத்தில்  எழுந்தருளினார். காலை 5 மணியளவில் சோடச உபசார பூஜைகள் செய்து புறப்பாடு நடந்தது.
பின்னர் 6 மணியளவில் பிரகார புறப்பாடும், 6.20 மணிக்கு ராஜகோபுர வாசல் தீபாராதனையுடன் கோபுர தரிசன கருட சேவையில் எழுந்தருளினார். அப்போது நாலாயிர திவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, வேத பாராயணத்தை பாடினர். பின்னர் கோவிலின் 4 வீதிகளிலும் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் கோவில் திருக்குளமான நந்திபுஷ்கர திருக்குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெகந்நாத பெருமாள் கைங்கர்ய சபாவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar