மேல்மலையனுாரில் அமாவாசை பூஜை பக்தர்கள் பங்கேற்க அனுமதி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2021 07:02
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 11 மாதங்களுக்கு பிறகு தை அமாவாசையன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில்,கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அமாவாசை பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.பதினொறு மாதங்களுக்கு பிறகு, தை அமாவாசையான இன்று மூலவர் அங்காளம்மனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 7:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஆகம விதிப்படி பூசாரிகள் மட்டும் செய்ய உள்ளனர்.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு விடுத்துள்ள அறிக்கையில் ஊஞ்சல் மண்டபத்தில் நடக்கும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. கோவிலில் பக்தர்கள் அனைத்து வகையான சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.இருப்பினும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.