Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் ... தை அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரையாக இருக்கன்குடி வரும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2021
05:02

சாத்துார்: ஏகாம்பரம் மாரியம்மன் கோவிலில் இன்று தை கடைசி வெள்ளி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சேத்தூர் , தென்காசி மாவட்டம் சிவகிரி, சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் முதல் சென்று வருகின்றனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி மற்றும் தை கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம் தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழாக்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வருவதால் கோவில்களில் வழக்கம்போல் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுவதோடு முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் இன்று தை கடைசி வெள்ளி என்பதால் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக கார் பஸ் லாரி ஆகியவற்றிலும் வந்து குவிந்து வருகின்றனர் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஆங்காங்கே வாகனங்களில் கொண்டு வரும் உணவுகளை சமைத்து உண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் கோவிலை நோக்கி நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு சாத்தூர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு பூசாரிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar