Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம் எமதர்மர் கோவிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெருப்பூர் முத்தத்திராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2021
05:02

பென்னாகரம்: நெருப்பூர் அருகே, முத்தத்திராயன் சுவாமிக்கு, தை மாத அமாவாசையையொட்டி, நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, நெருப்பூர் அருகே முத்தத்திராயன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலை, சந்தனமர கடத்தல் வீரப்பன் வழிபட்டு வந்ததால், வீரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நேற்று, தை மாத அமாவாசை என்பதால், நெருப்பூர், ஒட்டனூர், காட்டூர், நாகமரை, பன்னவாடியன்காடு, காமராஜ்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கொரோனா காரணமாக, கடந்த மார்கழியில், முத்தத்திராயன் கோவில் திருவிழாவுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், நேற்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். இவர்கள், சுவாமி சிலையை தூக்கி, கோவிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள், கிரிவல பாதையில், சுவாமி சிலை தங்களை தாண்டி செல்லும் வகையில் படுத்தனர். இதனால், தீய சக்திகள் தங்களை விட்டு விலகும் என்று நம்புகின்றனர். மேலும், பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar