Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் 27ம்தேதி தேரோட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் 27ம்தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூர் திவ்யதேச கோயிலில் 11 தங்க கருடசேவை உத்ஸவம்
எழுத்தின் அளவு:
திருநாங்கூர் திவ்யதேச கோயிலில் 11 தங்க கருடசேவை உத்ஸவம்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
10:02

மயிலாடுதுறை : திருநாங்கூர் திவ்யதேச கோயில் நடைபெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவத்தில் திமுக தலைவர் மனைவி துர்கா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை தரிசித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்களான நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீநாராயண பெருமாள், அரிமேய வின்னகரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திரு மேணிக்கூடம் ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்யதேச கோயில் கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம். இவ்வாண்டு கருட சேவை உத்ஸவம் நேற்று இரவு நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு முதல் நாள் அன்று திருநகரி ஸ்ரீ கல்யாணரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் தங்களது கோயில்களில் இருந்து புறப்ப ட்டு நாங்கூர் மணிமாடக்கோயிலில் நேற்று மாலை எழுந்தருளினர்.

அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. அதிகாலை 12:30 மணிக்கு மணிமாடக்கோயில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருள அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று. தொடர்ந்து கும்பதீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அ ப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து 1:00 மணிக்கு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தி ல் வீதியுலா காட்சி நடைபெற்றது. கருடசேவையில் திமுக., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை சே வித்தனர். ;விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar