Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்க்கை அம்மன் கோவில் நிலம் ... தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: முகூர்த்தகால் நடப்பட்டது தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரியில் தெப்ப தேரோட்டம் நடத்திய மக்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
04:02

அரூர்: அரூர் அருகே, 10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியில், அலங்க ரித்த தேரில், சுவாமிகளை வைத்து, கிராம மக்கள் தெப்ப தேரோட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சங்கிலிவாடியில் உள்ள ஏரி, சமீபத்தில் பெய்த மழையால், 10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. இதையடுத்து, நேற்று, அலங்கரிக்கப்பட்ட தேரில், புதூர் மாரியம்மன்,  பாப்பார மாரியம்மன், கல்லூர் வேடியப்பன், முத்து வேடியப்பன் ஆகிய சுவாமிகள் மற்றும் நீர் நிரம்பிய கரகம் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஏரியில் தெப்பத் தேரோட்டம் நடந்தது. பெண்கள்,  மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு பூஜை செய்தனர். முன்னதாக, ஆட்டுக்கிடாய் பலியிட்டனர். இதில், செல்லம்பட்டி, கோணம்பட்டி, செல்லம்பட்டி புதூர், சங்கிலிவாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை  சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த காலங்களில், ஏரி நிரம்பும்போது, அலங்கரித்த தேரில், சுவாமிகளை வைத்து முன்னோர்கள் தெப்ப தேரோட்டம் நடத்தினர். இதனால், மழை பொழிந்து,  விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக இருந்தது. இந்நிலையில், 10 ஆண்டு களுக்கு பின், ஏரி நிரம்பியதால், முன்னோர்கள் வழியில், நாங்களும் தெப்ப தேரோட்டம் நடத்தினோம். இவ்வாறு, அவர்கள்  கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar