Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமனின் வேறு பெயர்கள் வாழ்க்கையை வளமாக்கும் நட்சத்திர மரங்கள்! வாழ்க்கையை வளமாக்கும் நட்சத்திர ...
முதல் பக்கம் » துளிகள்
புஷ்கர் பிரம்மா கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
10:03

படைப்புக் கடவுளான பிரம்மாவின் கோயில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் உள்து. இங்கு சாவித்திரி, காயத்ரியுடன் பிரம்மா அருள்புரிகிறார்.   

ஒருமுறை பிரம்மா உலக நலன் கருதி யாகம் ஒன்றை நடத்த விரும்பினார். அதற்காகத் தன் வாகனமான அன்னப் பறவையிடம் தாமரை மலரைக் கொடுத்து வழியில் அதை எங்கு கீழே விடுகிறதோ அங்கு நடத்த முடிவு செய்தார். அந்த இடமே புஷ்கர் எனப் பெயர் பெற்றது. இதற்கு ‘நீலத்தாமரை’ என்பது பொருள்.
 யாகத்தை தொடங்குவதற்காக பிரம்மா மனைவி சாவித்திரிக்காக காத்திருந்தார். அவள் வர தாமதமானதால் யாகத்தை தொடங்க முடியாமல் போகவே இந்திரனிடம் ஆலோசனையின்படி காயத்ரி என்னும் பெண்ணை திருமணம் செய்து யாகத்தில் அமர்ந்தார். தாமதமாக வந்த சாவித்திரி யாகத்தில் வேறொரு பெண் இருப்பது கண்டு, ‘இனி உமக்கு கோயில் இல்லாமல் போகட்டும்’  என சபித்தாள். அருகிலுள்ள அருணகிரி என்னும் குன்றில் ஏறி அமர்ந்தாள்.
கோயிலின் நுழைவு வாயில் கோட்டையின் முகப்பு போல இருக்கிறது. ‘ஸ்ரீஜகத்பிதா பிரம்மா மந்திர்’ என வாசலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ‘உலகத்தின் தந்தை பிரம்மாவின் கோயில்’ என பொருள். கருவறையின் மீது 70 அடி உயர விமானத்தில் வாகனமான அன்னம் பளிச்சென காட்சியளிக்கிறது. பிரகாரத்தின் ஒரு பகுதியில் காணிக்கையாக வழங்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கி வெள்ளி ஆமை உள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் புஷ்கர்.   
நான்கு முகங்களைக் கொண்ட  பிரம்மாவின் சலவைக்கல்லால் ஆன சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். அவரது கைகளில் புத்தகம், அருகம்புல், கமண்டலம், ஜெபமாலை உள்ளன. இதை ‘விஸ்வகர்மா கோலம்’ என்கின்றனர். பிரம்மாவின் இடப்புறம் காயத்ரி, வலப்புறம் சாவித்திரி உள்ளனர்.  
 பராசர கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். சந்நியாசி, பிரம்மச்சாரி மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும். அருகிலுள்ள ஆரவல்லி குன்றி்ல் ஏறி இயற்கையை ரசிக்கலாம்.  
எதிரெதிர் திசைகளில் உள்ள குன்றுகளில் கோயில்கள் உள்ளன. உயரமான குன்றின் மீது சாவித்திரி கோயிலும், மற்றொரு சிறு குன்றின் மீது காயத்ரி கோயிலும் உள்ளது. கார்த்திகை பவுர்ணமியின் போது ஒட்டகத் திருவிழா நடக்கிறது.  
எப்படி செல்வது
* ராஜஸ்தான் உதய்ப்பூரில் இருந்து 279 கி.மீ.,
* ராஜஸ்தான் ஜோத்பூரில் இருந்து 185 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar