Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான தர்மம் எது நடுநிலையோடு இருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2021
02:03

சொல்கிறார் விவேகானந்தர்

* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை ஆக்கவே வந்திருக்கிறோம்.       
* துணிவுடன் முன்னேறுங்கள். தற்போதைய நிலை குறித்து சிந்திக்காதீர்கள்.  
* லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு கடமையில் ஈடுபடுங்கள்.
* முழுப்பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு பணியாற்றுங்கள்.
* அரிய செயல்கள் நிறைவேற உழைப்பு, விடாமுயற்சியும் அவசியம்.       
* எதை மண்ணில் விதைத்தோமோ அதையே அறுவடை செய்ய முடியும். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம்.
* செயலில் மட்டுமில்லாமல் மனதாலும் நல்லதை சிந்தியுங்கள்.      
* முகத்தில் புன்னகையும், பேச்சில் இனிமையும் கொண்டிருங்கள்.
* குழந்தையின் கள்ளம் கபடமற்ற தன்மையோடு செயலாற்றுங்கள்.
* நாய்க்கு ஒரு பிடி சோறிட்டாலும், அந்த நாயைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள்.
* நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை மனதில் அடிக்கடி சிந்தியுங்கள்.
* தன்னை நம்பாதவன் கடவுள் மீது பக்தி செலுத்தாத நாத்திகன் போன்றவன்.      
* மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே மாறி விடும் சக்தி படைத்தவன்.
* ‘நான் எதையும் சாதிக்க வல்லவன்’ என்ற மனஉறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.      
* பிறருக்குச் செய்யும் எளிய சேவை கூட உங்களுக்கு பேராற்றலை உண்டாக்கும்.
* தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள்.
* பாமரனைப் பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகம்.    
* உண்மை எங்கே அழைத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்.
* கோழையாகவும், வேஷதாரியாகவும் யாரும் இருக்காதீர்கள்.       
* அடக்கப்படாத மனம் மனிதனை கீழ்நோக்கி இழுத்துச் செல்லும்.
* அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பு அளிப்பதோடு சுதந்திரமாக வாழச் செய்யும்.       
* உயிர் வாழ்வதற்கான  ஒரே அறிகுறி வளர்ச்சியடைவது தான்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் விரிவடையுங்கள். அதுவே உண்மையான வளர்ச்சி.     

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar