Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணகிரியில் சிவன் பார்வதி ... திருப்புல்லாணி கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம்: மார்ச் 19ல் துவக்கம் திருப்புல்லாணி கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுாரில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுாரில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

17 மார்
2021
11:03

 செஞ்சி : விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

மறுநாள் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.ஐந்தாம் நாளான நேற்று மாலை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடந்தது. இதை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனுடன், காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைத்திருந்த தீக்குண்டத்தில் சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் இறங்கினார். அவரை தொடர்ந்து கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு 8 மணிவரை தொடர்ந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.அலகு குத்தியும், செடல் குத்தியும் வந்த பக்தர்கள் லாரியை இழுத்தும், பறவை காவடி மூலம் ஆகயாமார்க்கமாகவும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திருத்தேர் வடம்மேல்மலையனுார் கோவிலின் முக்கிய விழாவான தேரோட்டம் நாளை (18ம் தேதி) மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar