Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹாவிஷ்ணு பத்து அவதாரங்கள் ... பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணக்கஷ்டம் தீர்க்கும் பதிகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2021
11:03

என்ன தான் உழைத்தாலும், கையில் பணம் தங்குவதில்லை. உடல்நிலை போன்ற பல பிரச்னைகளால் விரயமாகியும் விடுகிறது. அப்படிப்பட்டவர்கள், இந்தப் பதிகத்தைப் பாடலாம். ஞானசம்பந்தர் அருளியது இது.

1. இடரினும் தளரினும் எனது உறுநோய்
 தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்
 கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
 மிடறினில் அடக்கிய வேதியனே.

2. வாழினும் சாவினும் வருந்தினும் போய்
 வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;
 தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னி
 போழ் இளமதி வைத்த புண்ணியனே.

3. நனவினும் கனவினும் நம்பா, உன்னை
 மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்
 புனல்வரி நறுங்கொன்றைப் போது அணிந்த
 கனல்எரி அனல்புல்கு கையவனே.

4. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
 அம்மலர் அடிஅலால், அரற்றாது என்றா;
 கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
 மும்மதில் எரி எழ முனிந்தவனே.

5. கையது வீழினும் கழிவு உறினும்
 செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்
 கொய் அணி நறுமலர் குலாய சென்னி
 மைஅணி மிடறு உடை மறையவனே!

6. வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்
 எந்தாய், உன் அடியலால் ஏத்தாது என் நா;
 ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
 சந்தவெண் பொடிஅணி சங்கரனே.

7. வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
 அப்பா உன் அடிஅலால் அரற்றாது; என் நா;
 ஒப்புடை ஒருவனை உரு அழிய
 அப்படி அழல் எழ விழித்தவனே.

8. பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும்
 சீர்உடைக்கழல் அலால், சிந்தை செய்யேன்;
 ஏர் உடை மணிமுடி ராவணனை
 ஆர் இடர்பட வரை அடர்த்தவனே.

9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
 ஒண்மலர் அடிஅலால் உரையாது என் நா;
 கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
 அண்ணலும் அளப்பரிது ஆயவனே.
10. பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
 அத்தா உன் அடி அலால் அரற்றாது என் நா
 புத்தரும் சமணரும் புறன் உரைக்க
 பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!

11. அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
 இலைநுனை வேல்படை எம் இறையை
 நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
 விலையுடை அருந்தமிழ் மாலை வல்லார்
 வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர்
வியனுலகம் நிலையாக முன்னேறுவர்;
நிலைமிசை நிலை இலரே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar