Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... சித்தர்மலையில் அகற்றிய லிங்கம் மீண்டும் பிரதிஷ்டை சித்தர்மலையில் அகற்றிய லிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

25 மார்
2021
09:03

காஞ்சிபுரம்; ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்து சென்றனர்.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது.இதை முன்னிட்டு, ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி அம்பாளுடன், காலை, 7:00 மணிக்கு, தேரில் எழுந்தருளினார். காலை, 9:15 மணிக்கு, அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன், தேரோட்டத்தை துவக்கி வைத்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதியம், 1:30 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் தொண்டை மண்டல ஆதினம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக, தேர் செல்லும் வழிகளில், பக்தர்கள் மாக்கோலம் போட்டனர். சிவபூத வாத்தியங்கள் முழங்க, ஏகாம்பரநாதர், தேரில் ஆடி அசைந்தபடி, நான்கு வீதிகளில் உலா சென்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar