திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கைபாரம் நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2021 09:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி ஐந்தாம் திருவிழாவான நேற்று சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி கைபாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி ஐந்தாம் நாள் திருவிழாவான கைபாரம் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் மார்ச் 18ல் திருவிழா துவங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். நேற்றிரவு 2 டன் எடைகொண்ட வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, தெய்வானையை, சீர்பாதங்கள், கிராமத்தினர், பக்தர்கள் உள்ளங்கைகளில் தலைக்குமேல் துாக்கி கொண்டு கொத்தாள முக்கு முதல் கோயில் வாசல் வரை ஓடினர். பின்பு பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக 29ல் சூரசம்ஹார லீலை, 30ல் சுவாமிக்கு பட்டாபிஷகம், 31ல் திருக்கல்யாணம், ஏப்.,1ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.