Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவுர்ணமியன்று மலை சுற்றுங்க! புராணத்தில் பங்குனி உத்திரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
என் இதயம் என்றும் உனக்காக ஐயப்பா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2021
10:03

பங்குனி உத்திரத்தன்று அவதரித்த ஐயப்பன் குறித்த வரலாற்றை விளக்குகிறார் காஞ்சி மகாபெரியவர்.  உயிர்களுக்கு ஞானம் என்னும் அறிவைத் தருபவர் சிவபெருமான். உயிர்களைக் காப்பவர் மகாவிஷ்ணு. இப்படி சொல்வதால் சிவ, விஷ்ணுவை வெவ்வேறு தெய்வங்களாக கருதக் கூடாது. ஒரே கடவுளே சிவனாகவும், விஷ்ணுவாகவும் அருள்புரிகின்றனர்.


பனிமலையான கைலாயத்தில் இருக்கும் சிவன் உடம்பெல்லாம் திருநீறு, புலித்தோல் ஆடை, ஜடாமுடி என்று தவவாழ்வு நடத்துகிறார். அவர் இருக்கும் இடத்தில் அமைதி, ஞானம் நிறைந்திருக்கும். சிவனின் அழகு மனதை அடங்கச் செய்யும். அமைதி தரும். சிவனுக்கு அபிேஷகத்தில் விருப்பம் அதிகம். வடமாநில கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேல் ‘தாரா பாத்திரம்’ வைத்திருப்பர். அதில் இருந்து தண்ணீர் சிவலிங்கத்தின் மீது சொட்டியபடி இருக்கும்.  வைகுண்டத்தில் ஆதிசேஷன் மீது துயிலும் மகாவிஷ்ணு பட்டு பீதாம்பரத்துடன் இருக்கிறார். அவரது மார்பில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். அதனால் செல்வத்துடன் மகாராஜாவாக இருக்கிறார். விஷ்ணுவின் அழகு மனதைக் கூத்தாடச் செய்கிறது. அலங்காரப் பிரியரான இவருக்கு கோயில்களில் ஆடை, ஆபரணங்களைச் சூட்டி அழகு பார்க்கிறோம்.
இதை,‘‘அலங்காரப் ப்ரியோ விஷ்ணு; அபிேஷகம் ப்ரியோ சிவ:’’ என்பார்கள்.

 ராமர், கிருஷ்ணராக அவதரித்த போதே விஷ்ணு அழகால் அனைவரையும் கவர்ந்தார். இவர் பெண் வடிவில் ‘மோகினி’ யாக வந்தால் சொல்லவா வேண்டும்?  காண்போர் மனதைக் கொள்ளை கொண்டார். ஞானியான சிவன் கூட மயங்கிப் போனார். இந்நிலையில் மோகினியும் சிவனும் இணைந்திட மகாஜோதி வெளிப்பட்டது. அதுவே ‘ஐயப்பன்’ என்னும் அருள் வடிவம் கொண்டது.


தாயான மோகினியிடம் இருந்து காக்கும் சக்தியையும், தந்தை சிவனிடம் இருந்து ஞானத்தையும் பெற்று ‘ஹரிஹர புத்திரன்’ என பெயர் பெற்றார் ஐயப்பன். இவருக்கு ஐயன், ஐயனார், சாஸ்தா, சாத்தன் எனப் பல பெயருண்டு. ‘ஐயன்’ என்பது ‘ஆர்ய’ என்ற சொல்லின் திரிபு. ‘மதிப்புக்குரிய’ என்பது இதன் பொருள். கேரளாவில் ‘ஆரியங்காவு’ என்பது ஐயப்பனுக்குரிய காட்டிற்கு பெயர் வைத்துள்ளனர். சிவனின் பிள்ளையான இவரை மட்டும் ‘மதிப்புக்குரியவர்’ என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. ‘சாஸ்தா’ என்பதை தமிழில் ‘சாத்தன்’ எனச் சொல்வர். கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் தெய்வம் சாஸ்தா தான். சாத்தனுார் என்னும் பெயரில் தமிழகத்தில் பல கிராமங்கள் உள்ளன. காவல் தெய்வமான இவர் காற்று, கருப்பு என்னும் தீயசக்திகளில் இருந்து காக்கிறார். இதயத்தை ஐயப்பனுக்கு கொடுத்து விட்டால் செல்வத்தையும், மேலான ஞானத்தையும் வழங்குவார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar